Thursday, 7 June 2012

போராட்டக் களத்தில் விஜயா மருத்துவமனை செவிலியர்கள்


கடந்த ஆறுமாதங்களுக்கு மேலாக பல்வேறு தனியார்  மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் சம்பள உயர்வு, 8 மணி நேர வேலை , சட்ட விரோதமான ஒப்பந்தம் கூடாது உள்பட பல கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். பல  போராட்டங்கள் வெற்றியும் பெற்றன. தற்போது வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையை சேர்ந்த 400 க்கு மேற்பட்ட செவிலியர்கள் முறைப்படி ஸ்ட்ரைக் நோட்டீஸ் கொடுத்தும் அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப் படாததால் மே 28 , 2012 முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.  

Sunday, 3 June 2012

நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவேண்டும்



மத்திய அரசு நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (NLC ) பணிபுரியும் ஒப்பந்தத்  தொழிலாளர்கள் ஏப்ரல் 21 ,2012 முதல் கால வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பல சுற்று பேச்சு வார்த்தைகள் நிர்வாகத்திற்கும் , தொழிலாளர்களுக்கும்  இடையே நிகழ்ந்தபோதும்  தொழிலாளர்களின் நியாயமான எந்தக் கோரிக்கைகளையும்  ஏற்க என்.எல்.சி நிர்வாகம் முன்வரவில்லை. 

Saturday, 2 June 2012

மதுரையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் ஜி.வி.கே வின் அடக்குமுறைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்



108 ஆம்புலன்ஸ் திட்டம் முழுக்க முழுக்க அரசின் நிதியுதவியுடன் நடைபெறுகிறது, ஆம்புலன்ஸ் வாங்குவது, ஊழியர்களின் சம்பளம், வண்டிக்கு ஆகும் பிற செலவுகள் அனைத்துமே அரசே வழங்குகிறது. ஜி.வி.கே. நிறுவனம் வெறுமனமே அரசின் பணத்தை பெற்று அதை நிர்வாகம் செய்யும் பணியை மட்டும் செய்கிறது. இவ்வாறு செயல்படும் இந்த 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு அரசு தரும் சம்பளத்தை விட குறைவான சம்பளத்தையே ஊழியர்களுக்கு வழங்கிவருகிறது ஜி.வி.கே.நிர்வாகம் . பணி மூப்பின்  அடிப்படையில் சம்பள உயர்வை வழங்காமல் அப்ரைசல் என்ற பெயரில் நிர்வாகத்திற்கு சாதகமாக நடந்து கொள்பவர்களுக்கு சற்று கூடுதலாகவும்  ( அதுவும் அதிகம் இல்லை ) , மற்றவர்களுக்கு மிக குறைந்த ஊதிய உயர்வையும் வழங்கி வருகிறது. 

Tuesday, 1 May 2012

மே 1 : தொழிலாளர் தினத்தில் வர்க்க விடுதலையை வென்றெடுக்க உறுதியேற்போம்


சிகாகோ தொழிலாளர்களின் போராட்ட உரிமை குரலை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது முதலாளித்துவம். ஆனாலும் உலகம் முழுவதுமான தொழிலாளர்களின் எழுச்சிக்கு அந்த போராட்டமே வித்திட்டது. 8 மணி நேரம் வேலை, 8 மணிநேர ஓய்வு , 8 மணி நேரம் சமுதாயப்பணி ஆகிய முழக்கங்கள் உலகம் முழுவதும் தொழிலாளர்களால் முழக்கங்கப்பட்டது. இன்று தொழிலாளி வர்க்கம் பெற்றுள்ள பல உரிமைகள் பல்வேறு தொழிலாளர் இயக்கங்களால் ரத்தம் சிந்தி பெறப்பட்டவையே. அப்படி பெறப்பட்ட உரிமைகள் ஒவ்வொன்றாக தொழிலாளர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இன்று உழைக்கும் மக்களை விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றின் கொடுமையை முன்பை விட அதிகமாக அனுபவிக்கும் நிலைமைக்கு முதலாளித்துவம் தள்ளியுள்ளது. 

Monday, 30 April 2012

நம்பிக்கை ஒளியை ஏற்றியது: மதுரையில் நடைபெற்ற அச்சகத் தொழிலாளர் கருத்தரங்கம்


மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்  மதுரை ,செல்லூர், 50 அடி ரோடு, தியாகி பாலு 2-வது தெருவில் உள்ள மகாலட்சுமி திருமண மண்டபத்தில் மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் சார்ப்பாக   19.04.2012  அன்று மாலை 4 மணியளவில்  நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அச்சகத் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த தோழர்.கதிரவன் தலைமை தாங்கினார். 
 

Friday, 13 April 2012

மையில நனச்சு பேப்பரில் அடிச்சால் மறுத்துப் பேச ஆளில்லை


மையில நனச்சு பேப்பரில் அடிச்சால் 
மறுத்துப் பேச ஆளில்லை; அதனைச் செய்யும் 
அச்சகத் தொழிலாளரின் பிரச்னைகளை 
நினைத்துப் பார்க்க அமைப்பில்லை 
என்ற நிலையை மாற்ற அணிதிரள்வோம்

 வாழ்க்கைச் செலவினங்கள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்தாலும் சம்பளம் மட்டும் சிறிதளவு கூட உயராத பல தொழில்கள் நமது நாட்டில் உள்ளன. அவற்றில் ஒன்று அச்சுத் தொழிலாகும். “உலகம் இதுலே அடங்குது உண்மையும் பொய்யும் விளங்குது, கலகம் வருது; தீருது; அச்சுக் கலையால் உலகம் மாறுது” என்று பாடினார் கவிஞர் மருதகாசி. அவ்வாறு உலகையே மாற்றிய அச்சுக் கலைத்துறையில் பணிபுரிவோரின் ஊதியங்கள் சராசரியாக  மாதம் ரூபாய் 5000/ என்னும் அளவிற்கே உள்ளன.

Tuesday, 13 March 2012

இருபது வருடங்களாக தொழிலாளர்களை பாடாய் படுத்தி வரும் புகலூர் பாரிஸ் சுகர் பேக்டரி நிர்வாகம்


நமக்கு இனிப்பு சுவை தரும் பண்டங்களை சாப்பிடும் பொது சந்தோசம் பிறக்கும் , ஆனால் அந்த இனிப்பு சுவைக்கு காரணமான  சர்க்கரையை விளைவிக்கும் விவசாயிகளும் , சர்க்கரை ஆலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களும் அது போன்ற சந்தோசத்தை அனுபவித்த தருணங்கள் மிக குறைவே ஆகும். மிகப்பிரமாண்டமான ஆலையில் ராட்சத அரவை இயந்திரங்களில் அறைபடுவது கரும்பு மட்டுமல்ல ஏழை தொழிலாளர்களும் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும். தொழிலாளி  அவன் விளைவிக்கும் பொருள்களில் இருந்தே அன்னியமாக்கபடும் தனிச் சொத்துடமை ஒழியும் வரை இந்த கொடுமைகள் தொடரவே செய்யும் .